மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முழுஉருவப் படம் சட்டப் பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இவ்விழாவுக்கு தலைமையேற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தினார்.

Special Correspondent

மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவர்கள், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், அரசு வழக்குரைஞர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

உச்ச நீதிமன்றத்தினால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 4 ஆண்டுகால சிறை மற்றும் 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட முதல் குற்றவாளியான ஜெயலலிதா அவர்கள் இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால், சசிகலாவோடு பெங்களூர் சிறையில் இருந்திருப்பார். ஏற்கனவே, அரசு கட்டிடங்கள் மற்றும் அரசு விழாக்களில் அவரது புகைப்படங்களை வைக்கக்கூடாது என்று எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்து, அந்த வழக்கு விசாரணை இன்று நடைபெறவிருக்கின்ற நிலையில், தங்களுடைய நோக்கத்துக்கு எதிராக தீர்ப்பு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் அவசர அவசரமாக அம்மையார் ஜெயலலிதா அவர்களின் படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்திருக்கின்றனர் என்று இந்த நிகழ்ச்சியை புறகணித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறினார்.

திமுக மட்டுமல்ல, காங்கிரஸ், சிபிஎம், தேமுதிக உள்ளிட்ட பல கட்சிகளும் எதிர்த்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, படத்தை திறந்து வைக்க வேண்டுமென்று பிரதமர் மோடி, மேதகு ஜனாதிபதி அவர்கள் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோரை அணுகியும், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு சட்டமன்றத்தில் படம் திறப்பது தவறு, எனவே வரமாட்டோம் என்று அத்துணை பேருமே சொன்ன பிறகுதான்...

அவசர அவசரமாக சபாநாயகர் மூலம் திறந்து இருக்கிறார்கள். இந்த லட்சணத்தில், மீன் வளத்துறை அமைச்சராக உள்ள ஜெயக்குமார், சட்டமன்றத்தில் மட்டுமல்ல, பாராளுமன்றத்திலும் படத்தை திறப்போம் என்று சொல்லி இருக்கிறார். அப்படியெனில், இன்று பிரதமரும், ஜனாதிபதியும் வரவில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறினார் .

மேலும் இந்த படம் திறப்பு சம்பந்தமாக நீதிமன்றம் சென்று தொடுத்த வழக்கை நீதிமன்றம் ஏற்று கொண்டது என்பதும் குறிபிட்டதக்கது .