பஜக ஆளும் அரியானா மாநிலம் குர்கானில் உள்ள அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு இல்லாத காரணத்தினால் கர்ப்பிணி பெண்ணுக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது :
இதனால், அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே பெண்ணுக்கு குழந்தை பிறந்தது தெரியவந்துள்ளது. ஆதார் கார்டு இல்லாததால் கர்ப்பிணி பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, குர்கான் முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் பி கே ரஜோரா, மேற்கூறிய சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவரையும்,செவிலியரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி கர்ப்பிணி பெண்ணின் கணவர் அருண் கேவாத் கூறுகையில்,” என் மனைவி முன்னி கேவத்தை குர்கான் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றேன். அங்கு பொது நலப்பிரிவிற்கு செல்லும் முன் செவிலியர்கள் என் மனைவியின் ஆதார் கார்டின் நகலை தங்களிடம் தருமாறு கூறினர். அதுவரை நாங்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினர். இதனால் வலியால் தவித்த என் மனைவிக்கு வெளியே குழந்தை பிறந்தது. தங்களுக்கு மருத்துவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை”என்றார்.
பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையின் இச்செயலைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.தகவலறிந்த முதன்மை அதிகாரி ரஜோரா ”இது குறித்து உள்விசாரணை நடைபெறுவதாகவும்,சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”என்றும் உறுதியளித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜென் இல்லாமல் பஜக ஆளும் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் 300க்கு மேற்ப்பட்ட குழந்தைகள் இறந்ததும் குறிப்பிடதக்கது.
சமீபத்தில் வெளியான நிதி அயோக் மருத்துவ குறியிட்டிலும் பஜக மாநில அரசுகள் பின் தாங்கி உள்ளது .