ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனராக பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ. இந்திரா நூயி தேர்வு பெற்றுள்ளார்.

Special Correspondent

வரும் ஜூன் மாதம் இவர் பதவியேற்க உள்ளதாக ஐ.சி.சி. செய்தி வாரிய கூட்டத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தன்னாட்சி பெற்ற இயக்குனரை தேர்வு செய்வதற்கான வாரிய கூட்டம் நடந்தது.

இதில் உலகளவில் சிறந்த பெண்மணியாக தேர்வு பெற்றவரும் பெப்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான இந்திரா நுயி ஒரு மனதாக தேர்வு பெற்றார். வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள ஆண்டு கூட்டத்தில் இந்திரா நுயி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. அமைப்பிற்கு முதன்முறையாக பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இப்பதவியில் இவர் 2 ஆண்டுகள் இருப்பார். மேலும் இரண்டு முறை பதவி நீட்டிக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் 6 ஆண்டுகள் இவர் தன்னாட்சி இயக்குனராக பதவி வகிக்ககூடும். ஐ.சி.சி.யின் முதல் பெண் இயக்குனரான இந்திரா நூயிக்கு வாழ்த்துக்கள் சமூகவலைதளத்திலே குவிந்த வண்ணம் உள்ளது.