தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கியது குறித்து எந்த ஆவணங்களும் இல்லை என நிதியமைச்சகம் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப தராமல் பஜக ஆட்சியில் தப்பி ஒடிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அவர் மீது தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த ராஜீவ்குமார் காரே என்பவர் வங்கிகளில் மல்லையா வாங்கிய கடன் குறித்த தகவல்களை அளிக்குமாறு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் நிதியமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சகம் சார்பில் அளித்த பதிலில் "விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் குறித்து எந்த ஆவணங்களும் தங்களிடம் இல்லை " என்றும் மேலும், அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் குறித்த விவரங்களும் தங்களிடம் இல்லை" என்றும் நிதியமைச்சகம் கூறியுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் இந்த பதில் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.