மலையம்பாக்கம் கிராமத்தில் ஒரு ரவுடியின் பிறந்தநாளை சுமார் 120 ரவுடிகள் கூடி கொண்டாடியுள்ளனர். இதனை அடுத்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, அம்பத்தூர் துணை ஆணையர் தலைமையில் சுமார் 10 இன்ஸ்பெக்டர்கள், 100க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் குழுவாக சென்று 75 ரவுடிகளை கைது செய்தனர்.
இவர்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்டனர். கொலைக்குற்றவாளிகள், கொள்ளை குற்றவாளிகள், சிறிய குற்றவாளிகள் என்று அவர்கள் மீதுள்ள வழக்கின் அடைப்படையில் பிரிக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்ற ஆவணங்கள் படி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் தப்போயோடிய ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கைது நடவடிக்கையின் போது ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் 88 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. செல்போன்களை ஆய்வு செய்து அவற்றின் அடைப்படியிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரவுடி பினு கேரளாவை சேர்ந்தவர் என்பவர் என்பதால் போலீசார் அங்கு விரைந்துள்ளனர். கைதான 23 பேர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் பற்றிய குற்ற பட்டியல் தயாராகி வருகிறது.
மேலும் அவர்களின் மீதான குற்ற வழக்குகளை ஆராய்ந்த பின்னர் 75 ரவுடிகளையும் குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
தமிழக போலிஸாரின் இந்த அதிரடி நடவடிக்கையை பாராட்டி சமூகவலைதலத்திலே பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன..