மாநிலங்களவையில் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு சப்தமாக சிரித்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா செளத்ரியை, ராமாயணத்தில் வரும் எதிர்மறையான பெண் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு மோடி விமர்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் தமிழ், இந்தி அறிவிப்புகள் நீக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குநர் அறிவித்துள்ளார்.

Special Correspondent

பொதுவாக சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்புப் பலகையில் இதுவரை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிப்பு வெளியாகும்.

ஆனால், காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால் 3 மொழிகளிலும் அறிவிப்புகள் வெளியிடுவதால் தாமதம் ஏற்படுவதாகவும், எனவே, காலை நேரங்களில் மட்டும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தப்படும், தமிழ் மற்றும் இந்தி அறிவிப்புகள் நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், தமிழ் அறிவிப்பு நீக்கப்பட்டதற்கு பயணிகள் இடையே மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் சமூகவலைதலத்திலே இந்திய அளவில் #GST வரி கட்டுவதிலே இரண்டாம் இடத்தில் இருக்கோம் அல்லவா அதற்க்கான பரிசு தானேஇது என்றும் பல்வேறு பதிவர்கள் மத்திய அரசை திட்டி திர்த்த நிலையில்.

காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலைய பெயர் பலகையில் ஆங்கிலத்தில் அறிவிப்பு வெளியானது டிஜிட்டல் பலகையில் கோளாறு காரணமாக இன்று காலை இந்த பிரச்சனை ஏற்பட்டது; பின்னர் அது சரி செய்யப்பட்டது என்று பல்டி அடித்த விமான நிலைய இயக்குநர் சந்திரமவுலி பிரச்ச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார்...