ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த விவரங்களை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் சமாஜவாதி கட்சியின் எம்.பி.யான நரேஷ் அகர்வால் கோரினார்.

Special Correspondent

அதற்கு, மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் "கடந்த 2008-ஆம் ஆண்டில், அப்போதைய மத்திய அரசு, பிரான்ஸ் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கு இடையே செய்துகொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிட முடியாது. அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் ரகசியம் காக்கப்படும். போர் விமானங்களை வாங்குவதற்கு அளிக்கப்பட்ட தொகையையும் தெரிவிக்க முடியாது " என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

Special Correspondent

இந்நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிம் அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்த விவரம் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு எவ்வளவு தொகை அளிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க முடியாது என்று முதல்முறையாக மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு எந்த மாதிரியான கொள்கையைப் பின்பற்றி வருகிறது என்று தெரியவில்லை.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் பிரான்ஸ் சென்று அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காமல் மத்திய அரசு மறைக்கிறது எனில், இந்த ஒப்பந்தத்தில் 39000கோடிகள் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதாகத் தானே அர்த்தம்.

மேலும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பிய ராகுல் ., "நியாயமான முறையில் இந்த விவகாரத்தை நீங்கள் அணுக முன்வர வேண்டும். இந்த விவகாரத்தை கையில் எடுக்கக் கூடாது என்று ஊடகங்களுக்கு பல விதங்களில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதை நான் அறிவேன். நீங்களும் அச்சமும், தயக்கமும் கொள்கிறீர்கள். இருப்பினும், சில சமயங்களிலாவது நீங்கள் இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் "என்றார் ராகுல் காந்தி.

இதனிடையே, ரஃபேல் ஒப்பந்த விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு மறுப்பதன் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் குற்றம்சாட்டினார்.

அக்கட்சியின் மூத்த தலைவர்களான ரண்தீப் சுர்ஜேவாலா, ராஜீவ் கௌடா ஆகியோரும் மத்திய அரசை இந்த விவகாரத்தை முன்வைத்து விமர்சித்தனர்.