மணிகார்னிகா படம் அடுத்த சர்ச்சை கிளப்பும் பத்மாவத் பட சர்ச்சையையடுத்து ஜான்சி ராணியின் கதையை வைத்து தயாரிக்கப்பட்டுள்ள ‛ மணிகார்னிகா' என்ற மற்றொரு திரைப்படம் சர்ச்சை கிளப்பி வருகிறது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ள பத்மாவத் திரைபடம் ராணி பத்மினியின் வரலாற்றை திரித்து கூறப்பட்டுள்ளதாக ராஜ்புத் இனத்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . பலத்த எதிர்ப்புக்கிடையே படம் ரிலீசானது.படமும் வசூலை அள்ளி குவித்தது.
இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடிப்பில் கிரீஷ் இயக்கத்தில் வெளியாக உள்ள மணிகார்னிகா படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
படத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமிபாய் வரலாற்றை திரித்து கூறப்பட்டுள்ளதாக ஹிந்த்துதுவ அமைப்பு மற்றும் பிராமண சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் இதனை மறுத்துளளார்.
பாதுகாப்பு துறை 39000 கோடி விமான கொள்முதல் ஊழல் மற்றும் நாட்டில் வளர்ச்சி எதும் அற்ற நிலையில் பாஜக மற்றும் அர்எஸ்எஸ் அமைப்பினர் இந்த மாதிரி பிர்சனையை கிளப்புவதாக சமூக வலைதளத்திலே பதிவர்கள் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்...