வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேஷ்டியை அரசு வழங்கி வருவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் பொங்களுக்கு இலவச வேஷ்டி சேலை கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் உள்ள பத்து ரேசன் கடைகளுக்கு இலவச வேஷ்டி சேலைகள் வந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகியும் கூட அதிகாரிகள் பொதுமக்களுக்கு கொடுக்க முன்வராமல் தாலுகா அலுவலகத்தில் உள்ள அறையில் வைத்து பூட்டி விட்டனர்.
இந்த விஷயம் லோக்கலில் உள்ள அதிமுக நகர செயலாளர் பீர்முகமது, கூட்டுறவு ஸ்டோர் தலைவர் துரைராஜ் ஆகியோர் காதுக்கு எட்டவே உடனே வனத்துறை அமைச்சர் சீனிவாசனிடம் முறையிட்டு இருக்கிறார்கள். இதனால் டென்ஷன் அடைந்த அமைச்சர் தாசில்தார் நிர்மலா சுரேஷ்சை சத்தம் போட்டு உடனே பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சேலையை கொடுக்க சொல்லி வலியுறுத்தி இருக்கிறார்.
ஆனால் அதிகாரியோ லோக்கலில் உள்ள தினகரன் கட்சிகாரர்களின் பேச்சை கேட்டு மந்திரி திட்டியதை மனதில் வைத்து கொண்டு இதுவரை பொங்கள் பண்டிகைக்கு வந்த இலவச வேஷ்டி சேலைகளை பொதுமக்களுக்கு கொடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டார்.
இதனால் இலவச வேஷ்டி சேலைகள் இன்னும் கொடுக்காமல் இருப்பதை கண்டு எடப்பாடி அரசு மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்த அளவுக்கு அமைச்சர் சீனிவாசன் சொல்லியும் அதிகாரி மெத்தன போக்கை கடைபிடித்து கொண்டு அமைச்சரயே மதிக்காமல் இருப்பது தான் வேதனையாக இருக்கிறது என்று கட்சிகாரர்கள் மத்தியில் புலம்பியும் வருகிறார்கள்.