பட்ஜெட் 2018 அறிவிப்பால் பங்கு சந்தைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் வரும் திங்கட்கிழமையும் நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளது முதலீட்டாளர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துள்ளது.

Special Correspondent

பங்கு சந்தை பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் நேற்று ஒரே நாளில் ரூ. 4.6 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் எதிர்ப்பார்த்த விஷயங்கள் கிடைக்காதது, புதிய ஒரு வரி விதிக்கப்பட்டுள்ளது போன்றவை பங்கு சந்தையின் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதுக்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஏற்ற இறக்கங்கள் நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளதால் திங்கட்கிழமையும் இதே நிலைமை நீடிக்குமோ என்று முதலீட்டாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மத்திய பட்ஜெட் பங்கு சந்தை சார்ந்த நீண்டகால முதலீடுகள் மூலம் வரும் லாபத்தில் 10% வரியை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார். இதன் காரணமாக கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு பங்கு சந்தை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.