அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழக மக்களின் உரிமைகளுக்கு பங்கம் ஏற்பட்டால் அதை தட்டிக் கேட்கும் முதல்வராகத் தான் ஆட்சி நடத்தினார்.ஜெயலலிதா வழியில் நாங்களும் மக்களுக்கு பிரச்னையை உருவாக்கும் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் பாதிப்பு இருந்தால் அதனை திருத்திக் கொள்ள மத்திய அரசுக்கு கூறுவோம். யார் தவறு செய்தாலும் அதனை தட்டிக் கேட்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கான நிதி தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரே இந்தியா என்று சொல்லி எல்லா அதிகாரங்களையும் மத்திய அரசே குவித்துக்கொள்வது நல்லதல்ல. அனைத்து மொழிகளையும் தேசிய மொழிகளாக ஆக்க வேண்டும். அப்படி ஒரு நிலை வரும்போது பட்ஜெட் தமிழ் உட்பட அனைத்து மொழிகளில் தாக்கல் செய்ய முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
முத்தலாக் விஷயத்திலும் சரி, அதேபோல் பல்வறு விஷயங்களிலும் மத்திய அரசு கொண்டு வந்த போது, ஜி.எஸ்.டியில் கூட சில திருத்தங்களை கூறி மத்திய அரசு செய்த பின்னரே அதனை ஏற்றக்கொண்டோம். மாநிலத்தின் நலன் கருதி இதையெல்லாம் செய்தால் தான் நாங்கள் ஆதரவு தருவோம் என்று கூறி தான் மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தோம். அதிமுக அரசு மாநில சுயாட்சியை கட்டி காப்பதில், பேணிக்காப்பதில், மாநிலத்தின் உரிமையை எந்த நிலையிலும் நாங்கள் விட்டுக்கொடுக்க மாட்டோம் என என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஆல்வார் மற்றும் அஜ்மீர் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல்கர்க் சட்டசபை தொகுதிக்கும், சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது. இந்த மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் லட்சம் வாக்கு வித்யாசத்தில் அமோக வெற்றி பெற்றது. இது பாஜகவுக்கு மோசமான பின்னடைவு என்பதும்...
ஆண்டாள் சர்ச்சை விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் பேசும் கேவலமான பேச்சு என்பதும், அதிமுக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சமீபத்தில் பிரதமர் மோடி சந்திக்க மறுத்ததும், ஆர்கே நகர் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை குருமுர்த்தி கேவலமாக பேசியதும் காரணம் என்கிறார்கள் ஆளும் கட்சி அதிமுக விஐபி நிர்வாகிகள்...