பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் குறித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எதிர்க்கட்சியான காங்கிரஸை சேர்ந்த முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங்கின் தெரிவித்த கருத்து விவரம் " தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்த பட்ஜெட் இருப்பதாக கருதவில்லை என்றும்,
பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் வரும் 2020-இல் இரட்டிப்பாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது குறித்து கூறுகையில், விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த இயலாது என்றும் தெரிவித்தார்.
"விவசாய பாதிப்பை சமாளிக்க எந்த மாதிரியான யுத்தி கையாளப்படுகிறது. விவசாயிகளுக்கான வருமானம் எப்படி இரட்டிப்பாகும். இந்த வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்படும்" என்று மன்மோகன் சிங் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும், அரசின் வருவாய் குறித்து தவறான கணக்குகளை கூறுகிறார்களோ என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். சீர்திருத்தங்கள் கொண்ட பட்ஜெட் என்பது தவறான கருத்து என்று மன்மோகன் சிங் கூறினார்.
மத்திய பட்ஜெட் அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழிசை, தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டாலும், ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களையும் தாங்கிப் பிடிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார். தனிநபர் தங்கள் வளர்ச்சியை தாங்களே மேற்கொள்ள இந்த பட்ஜெட் வழிவகுத்துள்ளதாக தமிழிசை கூறினார்.