ராஜஸ்தானில் ஆல்வார் மற்றும் அஜ்மீர் லோக்சபா தொகுதிகளுக்கும், மண்டல்கர்க் சட்டசபை தொகுதிக்கும், சமீபத்தில் இடைத் தேர்தல் நடந்தது.இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் இந்த மூன்று தொகுதிகளிலும், காங்கிரஸ் லட்சம் வாக்கு வித்யாசத்தில் அமோக வெற்றி பெற்றது.
ராஜபுத்ர சமூதாயத்தைச் சேர்ந்த, ராணி பத்மினி வரலாற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள, பத்மாவத் ஹிந்தி திரைப்படம் தொடர்பாக எழுந்த சர்ச்சை மற்றும் ஆல்வாரில் பசு பாதுகாவலர்களால் முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் மாநில அரசுக்கு எதிராக அமைந்தது. இது காங்.கிற்கு வெற்றியை தேடி தந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் இரு எம்பி தொகுதியிலும் 1.5 லட்சம் வாக்கு வித்யாசத்தில் காங்கிரசை மாபெரும் வெற்றி பெற வைத்து ராஜஸ்தானில் பிஜேபியை செய்த தோல்வியை குறித்து கர்னிசேனா அமைப்பின் தலைவர் யோகேந்திரா சிங் கால்வி கூறியது.
"சர்ச்சை படமான பத்மாவத்தை தடை செய்யமால் விட்டதே தேர்தல் தோல்விக்கு காரணம். பத்மாவத்தை நிரந்தரமாக தடை செய்திருந்தால் ஆளும் கட்சியான பா.ஜ. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கலாம் என பிரதமருக்கு ஆலோசனை கொடுத்திருப்பேன். என்னிடம் ஆலோசனை கேட்கவில்லை " என்கிறார் ஆனால் இதனை கிண்டல் அடித்து #RajasthanRejectsModi என்ற ஹஷ்டாக் மூலம் சமூகவலைதலத்திலே பலரும் பதிவிட்டு வருகின்றனர்...