குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று 99 இடங்களை மட்டுமே கைப்பற்றி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பெரும்பான்மை தேவையான 10 இடங்கள் இல்லாமல் காங்கிரஸ் கூட்டணி பலம் மிக்க எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ள நிலையில் முதல்வராக விஜய் ரூபானியும், துணை முதல்வர் நிதின் படேலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Special Correspondent

மேலும், அமைச்சர் பதவிகளுக்காக துறைகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், தனக்கு ஒதுக்கப்பட்ட துறைகளால் தாம் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்திருந்தார் துணை முதல்வர் நிதின் படேல். தனக்கு நிதித்துறை மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையை ஒதுக்கவேண்டும் என அவர் கோரியிருந்தார்.

ஆனால், நிதித்துறை சவுரப் படேலுக்கும், நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதல்வர் விஜய் ரூபானிக்கும் ஒதுக்கப்பட்டது. நிதின் படேலுக்கு சாலை மற்றும் கட்டிடங்கள், சுகாதாரத்துறைகள் மற்றும் நர்மதா உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகள் ஒதுக்கப்பட்டன.

இந்தத் துறைகளை ஒதுக்கி தமது செல்வாக்கை சீர்குலைத்துள்ளதாக கூறிய நிதின்படேல், பதவியேற்கவும் மறுப்பு தெரிவித்தார். ஆட்சியமைத்து ஒரு மாதம் நிறைவடைவதற்குள் கட்சிக்குள் பிரச்சனை வெடித்தது; கட்சி மேலிடம் வரை சென்றது.

இந்த நிலையில் படிதார் சமுதாயத் தலைவர் ஹர்தீக் படேல், 'பாஜக எம்.எல்.ஏக்கள் பத்து பேருடன் வந்தால், காங்கிரஸிடம் பேசி கேட்கும் பதவியை வாங்கித் தருகிறேன்' என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாம் 'கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவிடம் செல்போன் மூலமாக பேசியதாகவும், தமக்கு உரிய துறைகள் ஒதுக்கப்படும் என அவர் உறுதியளித்தாகவும்' நிதின் பட்டேல் தெரிவித்தார். அதையடுத்து இன்று காலை துணை முதல்வராக அவர் பதவியும் ஏற்றார்.

பிஜேபி இந்திய தலைமை இறங்கி குஜராத் துணை முதல்வரிடம் கெஞ்சி பேசியது பிஜேபி தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.