அமைச்சர் ஜெயக்குமார் குறித்து தாம் கூறிய Impotent என்கிற ஆங்கில வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று ட்விட்டரில் விளக்கமளித்தார்.

Special Correspondent

மேலும், தன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்தால், அதை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சர்ச்சைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தியது கண்டனத்திற்குரியது.

அவர் பண்பாளர் என்றால் தாம் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யத் தவறிவிட்டு, ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அவர் பாணியில் சொன்னால், ‘போடா புறம்போக்கு’ என்று கூறிவிட்டு, அகராதியில் அதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது என்று விளக்கமளித்தால் குருமூர்த்தி ஏற்றுக்கொள்வாரா? இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் எங்களுக்கும் தெரியும். அவர் இதுபோன்ற சிறுபிள்ளைத் தனமான விளையாட்டுகளில் இனி ஈடுபடக்கூடாது எனக் கூறினார்.

Special Correspondent

அவர் மீது வழக்கு தொடரப் போகிறீர்களா? என்று கேட்டபோது, அவர் மீது வழக்கு தொடர்வது பற்றி எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால், நாங்கள் பெருந்தன்மையோடு நடந்துகொள்கிறோம். மீண்டும் இது தொடருமானால், வழக்கை அவருக்கு பரிசாக வழங்குவதற்கு அரசு தயங்காது என பதிலளித்துள்ளார்.

முன்னாள் சிரிப்பு நடிகர் மற்றும் பிஜேபி பிரமுகர் எஸ்வி சேகர் எதற்காக சங்கராச்சாரியார் படத்தை முகப்பில் வைத்து குருமூர்த்தி ஸ்வாமிகளை அரசியல் பேசி அசிங்கப்படுத்த வேண்டும் தேவை என்றால் குருமூர்த்தியின் முகத்தை வைத்தே அவர் அரசியல் பேசட்டும் என்று கண்டித்துள்ளது பரபரப்பை கூடியுள்ளது.

சொந்த கட்சியினர் உள்ளிட்ட பலதரப்பட்ட இடங்களில் இருந்து தொடர்நது வரும் எதிர்ப்புகளால் குருமூர்த்தி கலங்கி இருப்பதாக அவரின் நெருங்கிய தரப்புகள் தெரிவிக்கின்றன.