தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு நீக்கப்பட்டுள்ளது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டிவிட்டரில் கருத்த தெரிவித்துள்ளார். அதில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Special Correspondent

இதையடுத்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அவர், ‘’அவதூறு கருத்தை பதிவிட்ட குருமூர்த்தி மீது அவசியம் இருந்தால் வழக்கு தொடருவோம். தனது வார்த்தைகளை குருமூர்த்தி திரும்ப பெறவேண்டும். குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை. ஆண்மை இல்லாதவர்கள்தான் ஆண்மையைப்பற்றி பேசுவார்கள். அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போல செயல்பட்டு வருகிறார்கள்’’ என்று ஆவேசமாக கூறினார்.

மன்னார்குடி ஆதரவாளர்களுக்கு எதிராக அதிமுக தலைமை தவணை முறையில் நடவடிக்கை எடுத்தது என்றும் ஆர்.கே.நகர் தேர்தலை மன்னார்குடி ஆதரவாளர்கள் விலைக்கு வாங்கிய போதும், காவல்துறையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்களை பிடிக்காமல் பதிலுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணியை தொடங்கியது என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சமூக வலைதளத்தில் ஆடிட்டர் குருமூர்த்தியின் தவறான பேச்சினை கண்டித்து அதிமுகவினர் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இது சம்பதமாக அமைச்சர்கள் குருமூர்த்தியுடன் பேசிய வீடியோவை வெளியிடுவோம் என்று அதிமுக முக்கிய புள்ளியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதால் பெரும் சர்ச்சையை துக்ளக் ஆசிரியர் எதிர் கொள்ள வேண்டியது வரும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்