தினகரனை விலக்கி விட்டு தினகரன் அணியினர் ஓபிஎஸ் அணி சேரும் முயற்சிக்கு குருமூர்த்தி காரணமாக விளங்கிய காரணத்தினால் அடிக்கடி அதிமுக அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் குருமூர்த்தி இல்லம் சென்று வந்ததை எதிர்கட்சிகள் ஜெயலலிதைக்கு சசிகலா போல பன்னிர் செல்வம் எடப்பாடி அணிகளுக்கு பினாமியாக குருமூர்த்தி செயல்படுகிறார் என்று அந்த சமயத்தில் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் தினகரன் வெற்றி பெற்று இரட்டை இலையை தோற்கடித்தது தொடர்ந்து தனது ட்விட்டரில் பன்னிர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களை ஆண்மையற்றவர்கள் என்று செய்த விமர்சனம் அதிமுக வினர் இடையே கோபத்தை கிளறிய நிலையில் அதிமுக முக்கிய புள்ளி ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.
அதில் அதிமுக அமைச்சர்கள் உடன் குருமூர்த்தி டீல் பேசும் விஷயம் தன்னிடம் இருப்பதாகவும் முட்டாள்தனமாக உளறுவதை குருமூர்த்தி நிறுத்தாவிட்டால் அதனை தானே வெளியிடுவேன் என்று பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அரசியல் நோக்கர்கள் அப்படி என்ன டீல் அமைச்சர்களுடன் நேரிடையாக தனது வீட்டில் குருமூர்த்தி பேசி இருப்பார் என்று கேள்விகளை சமூக வலைதளத்தில் எழுப்பி வருகின்றனர்.