ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி சமீபத்தில் துக்ளக் ஆசிரியர் ஆனார். இதற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்தார்.
திமுக எதிர்ப்பு பத்திரிகையாக துக்ளக் ஐ நடத்தி வந்த சோ ராமசாமி காலத்தில் சசிகலா வெளியேற்றம் நடந்த ஒரு வருடத்தில் ( 2011~2012) ஜெயலலிதா சார்பில் சசிகலா வகித்த மிடாஸ் சாராய உற்பத்தி கம்பெனிகளிலும் இயக்குனர் ஆகி சோ ராமசாமி சாராயம் உற்பத்தில் திறம் பட நடத்தி லாபத்தை குவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினகரன் அணியினர் ஓபிஎஸ் அணி சேரும் முயற்சிக்கு குருமூர்த்தி இவரே காரணமாக விளங்கிய காரணத்தினால் அடிக்கடி அதிமுக அமைச்சர்கள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் குருமூர்த்தி இல்லம் சென்று வந்ததை எதிர்கட்சிகள் ஜெயலலிதைக்கு சசிகலா போல பன்னிர் செல்வம் எடப்பாடி அணிகளுக்கு பினாமியாக குருமூர்த்தி செயல்படுகிறார் என்று குற்றம் சாட்டின.
இந்த நிலையில் ரெட்டை இலையை தினகரன் தோற்கடித்தவுடன் சுமார் 50க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், வி.பி.கலைராஜன், முத்தையா, ரங்கசாமி, பார்த்திபன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கபடுவதாக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுபவர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதனை ஆவேசமாக கண்டித்த ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபி ஆதரவாளர் ஆடிட்டர் குருமூர்த்தி ஆறு மாதமாக நடவடிக்கை எடுக்காத பன்னிர் செல்வம் மற்றும் எடப்பாடியை ஆண்மையற்றவர்கள் என்று தாக்கியுள்ளார்.
நோட்டவை விட கேவலமாக ஓட்டு வாங்கி டெபாசிட் இழந்த ஆர் எஸ் எஸ் பிஜேபி கட்சியை வைத்து கொண்டு தனிப்பட்ட முறையில் படுகேவலமாக முதல்வர் மற்றும் துணை முதல்வரை பேசிய குருமூர்த்தியை கண்டிக்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கோரி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கண்டிக்காவிட்டால் இவர்கள் தினகரன் அணி தாவ உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்.