டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், வி.பி.கலைராஜன், முத்தையா,ரங்கசாமி, பார்த்திபன் உள்ளிட்டோரை அ.தி.மு.க.விலிருந்து நீக்கபடுவதாக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுபவர்கள் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரன் ஆதரவாளர்கள் அ.தி.மு.க.வில் வகித்து வந்த பதவிகளில் இருந்து இதுவரை நீக்கப்படாமல் இருந்தனர். தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியை தொடர்ந்து அதிமுக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
முன்னதாக ஈபிஎஸ்-ஓபிஎஸ் தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுகவின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அவசரஅவசரமாக ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்.கே.நகரில் அதிமுகவின் தோல்விக்கு காரணமாக இருந்ததால் 6 பேரும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேனப்பய ஊர்ல கிறுக்குப் பய நாட்டாமையால்ல இருக்கு... என்று ஓபிஎஸை விமர்சித்த தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன்., அதிமுகவின் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்க எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை என தங்க.தமிழ்செல்வன் பேட்டியளித்துள்ளார்.
மேலும் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற தினகரனுக்கு 50 எம்எல்ஏக்கள் வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறினார். தினகரன் தலைமையில் மிகப்பெரிய மாற்றம் விரைவில் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.