இந்திய பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகலாத் ராய் செய்தியாளர்களிடம் தெரிவித்த விவரம் :

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1.80 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் 50 ஆயிரம் பேர் அடுத்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர்.

Special Correspondent

4ஜி அலைக்கற்றைக்கான லைசென்ஸை 5MHz spectrum in the 2100 MHz band, பி.எஸ்.என்.எல்-க்கு மத்திய அரசு வழங்க வேண்டும். அதோடு பி.எஸ்.என்.எல் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும். கூடவே பி.எஸ்.என்.எல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தனியார் நிறுவனங்களைப் பாதுகாக்கும் நோக்கில் செல்போன் டவர்களுக்கென தனி நிறுவனங்கள் அமைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக, ஜனவரி 8-ம் தேதி, 20 பி.எஸ்.என்.எல் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பொதுச்செயலாளர்களின் கூட்டம் டில்லியில் நடைபெற உள்ளது. அதில் எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல ஆர்ப்பாட்டம், நாடாளுமன்றம் நோக்கி பேரணி எனப் பல்வேறு போராட்டங்கள் நடத்தத் திட்டமிடுகிறோம்.

இது தொடர்பாக அனைத்து சங்கத்தினர் இணைந்து கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்துள்ளோம். மேலும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள மறுத்தால், அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம். ஆனால், அரசுக்கு எங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. வரும் மார்ச் மாதம் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்திடவும் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

மத்திய அரசே மத்திய அரசின் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்காததை அதிகாரிகள் சங்க பிரதிநிதி கேட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.