ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நீதிபதி O.P.ஷைனி (ஓம் பிரகாஷ் ஷைனி) டெல்லி காவல்துறையில் உதவி ஆய்வாளராக 1981 தொகுப்பில் இணைந்தவர்.
சட்டப்படிப்பு முடித்தவர். ஆறு வருடங்கள் உதவி ஆய்வாளராக பணியாற்றி பின்னர் நீதிபதிக்கான தேர்வு எழுதி நீதிபதியானவர்.
இவர் ஏற்கனவே 2010இல் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ' டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்' ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியவர்.
2000ஆம் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வு பெற்ற நிலையில், சில நீதிபதிகள் அவ்வழக்கை விசாரிக்கத் தயங்கினர். பின்னர் ஓ.பி.ஷைனி அந்த வழக்கை விசாரித்து முக்கிய குற்றவாளி முகமது ஆரிஃப்க்கு தூக்கு தண்டனை அளித்தார்.
2011ஆம் ஆண்டு மார்ச் மாதம், 2G ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் நீதிபதியாக ஓ.பி.ஷைனி நியமிக்கப்பட்டார்.
2011இல் கனிமொழிக்கு பெயில் கேட்டு விண்ணப்பித்தபொழுது, நிராகரித்தார்.
2013ஆம் ஆண்டில் கலைஞரின் மனைவி தயாளு அம்மாளின் உடல்நிலையை காரணம் காட்டி, வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியபோது 'வாதங்கள் திருப்திகரமாக இல்லை' என்று கூறி உறுதியாக மறுத்தார்.
தனது தீர்ப்பில், 'முதலில் மிகுந்த ஆர்வத்துடன் வழக்கை அணுகிய அரசு தரப்பு (CBI), போகப் போக வலுவிழந்து, பின்னர், குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது' என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளார்.