பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு புத்திசாலித்தனமற்ற முடிவு; இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுதான் மிச்சம் என்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு கண்மூடித்தனமான, புத்திசாலித்தனமற்ற முடிவாகும் என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியது.

Special Correspondent

இந்நிலையில், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க செலவிடப்பட்ட தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 1,695.7 கோடி புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டது. இதற்காக ரூ.4,968.84 கோடி செலவிடப்பட்டது.

அதேபோன்று 365.4 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.1,293.6 கோடி செலவிடப்பட்டது.

அதேபோன்று 178 கோடி 200 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ரூ.522.83 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மேலும் உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ரூ.7,961 கோடி கணக்கில் காட்டாத பணத்தை வருமான வரித்துறையினர் கண்டிபிடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.