சென்னையில் நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்து விட்டு ராஜஸ்தான் தப்பி சென்ற கொள்ளையர்களை பிடிக்க தமிழக காவல்துறையினர் ராஜஸ்தான் சென்றனர். மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டி, தலைமையில் கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் உள்ளிட்ட 4 பேர் ராஜஸ்தான் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் உள்ளது ராமாவாஸ் கிராமத்தில் போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது, கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் பெரியபாண்டி உயிரிழந்தார். அவருடன் சென்ற கொளத்தூர் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் முனிசேகர் காயமடைந்தார்.
இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டி மீது பாய்ந்த குண்டு கொள்ளையர்கள் துப்பாக்கியில் இருந்து பாய்ந்ததா? அல்லது சகபோலீசார் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததா? என்பது ராஜஸ்தான் மாநில போலீசாருக்கு மிகப்பெரிய சந்தேகமகா இருந்தது.
இந்நிலையில் இன்று காவல் ஆய்வாலர் பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கிகுண்டு என ராஜஸ்தான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் இப்போது கொள்ளையர்கள்தான் பெரியபாண்டியனை சுட்டனர் என கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தெரிவித்தது பெரும் முரணாக இப்பொது வெளிப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு எப்படி பாய்ந்தது என்பது குறித்து 6 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து ராஜஸ்தான் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு முனிசேகர் ஒத்துழைப்பு தராமல் சென்னை வந்து விட்டதால் அவர் மீது வழக்கு பாயும் என்கிறது ராஜஸதன் காவல்துறை வட்டாரம்.
ஆனால் தமிழக காவல் துறை தரப்போ இதனை பற்றி எதுவும் கூறாமல் மவுனம் காத்து வருகின்றனர்.