கடலுாரில் துாய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்யவும், மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு அதிகாரிகளுடன் கடலூருக்கு நேற்று பயணமானார் ஆளுநர்.
அப்போது, அவருக்கு தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டினர். தமிழக ஆளுநர் சொன்னா ரெட்டிக்குப் பிறகு, பன்வாரிலால் புரோஹித்துக்குதான் கறுப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது.
போகும் வழியில் தூய்மை இந்தியா திட்டத்தை ஆய்வு செய்ய வண்டிப்பாளையம் என்ற கிராமத்தில் வண்டியை நிறுத்தச் சொல்லியுள்ளார் ஆளுநர். அம்பேத்கர் நகரில் இறங்கி அந்தப் பகுதியில் கள ஆய்வு மேற்கொள்ள ஆரம்பித்தார் ஆளுநர். அப்போது ஒரு வீட்டின் அருகே இருந்த கீற்றுக் கதவை ஆளுநர் தடாலடியாகத் திறக்க உள்ளே ஒரு பெண் குளித்துக்கொண்டிருந்தார். திடீரென எனக் கீற்றுக் கதவைத் திறந்ததால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், துணிகளை வாரிச்சுருட்டி எடுத்துக்கொண்டு, தனது வீட்டுக்குள் ஓடிச்சென்றார். இந்தச் சம்பவத்தால் ஆளுநர் உட்பட அவருடன் சென்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மாநிலத்தின் ஆளுநர் ஒரு பகுதிக்கு வருவதைக்கூட அதிகாரிகள் முன்கூட்டியே அறியாமல் இருந்தார்களா என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இந்நிலையில், கடலூர் ஆய்வை முடித்துக்கொண்டு இன்று மாலை சென்னை திரும்பிக்கொண்டிருந்தார் ஆளுநர். ஆளுநரின் கான்வாய் மகாபலிபுரம் அருகே வந்துகொண்டிருந்தபோது, ஆளுநர் காரின் முன்சென்று கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் சாலையில் டூவிலரில் சென்றுகொண்டிருந்தவர்களின் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் டூவிலரில் சென்ற இருவருமே பலியாகிவிட்டனர்.
கடலூரில் ஏற்பட்ட சிக்கலே ஆளுநருக்கு மன உளச்சலை ஏற்படுத்திய நிலையில், இந்த விபத்து மேலும் அவரை டென்ஷனாக்கிவிட்டது.
ஆனால் இது எதிர்க்கட்சிகள் சதி என்று தமிழக பிஜேபி மறுத்து வருகின்றனர் . ஆளுநர் மளிகை குறிப்பும் இந்த செய்திகளுக்கு பொதுவாக மறுப்பு தெரிவித்து உள்ளது...
முன்னதாக குமரி மாவட்டம் ஆளுநர் ஆய்வு செய்கையில் அவருக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது . ஆனாலும் ஆளுநர் ஆய்வுக்கு ஆளும் அதிமுக அரசு மௌனமாக இருந்து வருகிறது அதன் அடிமைத்தனத்தை காட்டுவதாக தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் குற்றம் சட்டியுள்ளன.