மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் நடப்பு ஆண்டில், 1,50,482 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Special Correspondent

அக்டோபர் மாதம் வரை 87,018 பேர் இருந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டுமே சுமார் 62 ஆயிரம் பேர் மேலும் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக கேரளாவில் 19,694 பேரும், கர்நாடகாவில் 16,342 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2014ம் ஆண்டு தமிழகத்தில் 2,804 பேரும், 2015ல் 4,535 பேரும், 2016ல் 2,531 பேரும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.