நிலக்கரி ஊழல் வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுகோடாவுக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக மதுகோடா இருந்தபோது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதன்பேரில் மதுகோடா, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் ஹெச்.சி.குப்தா, முன்னாள் ஜார்க்கண்ட் தலைமை செயலர் ஏ.கே.பாசு, நிலக்கரித்துறை செயலர் ஹரிஷ் சந்திரா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த 13ம் தேதி நடைபெற்ற இவ்வழக்கு விசாரணியின்போது, மதுகோடா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மதுகோடாவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும் 25 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஹெச்.சி.குப்தா, அசோக்குமார் பாசு, விஜய் ஜோசி ஆகியோருக்கும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வகையில் குற்றவாளிகள் 4பேருக்கும் 2மாதம் இடைக்காலப் பிணை வழங்கியும் நீதிபதி பரத் பராசர் உத்தரவிட்டார்.
2015 ஆம் ஆண்டில் சொத்து குவிப்பு வழக்கில் முதல்வராக இருந்த போது ஜெயலலிதா நான்கு வருடம் சிறை தண்டனை நீதி அரசர் குன்ஹாவால் வழங்கப்பட்டு தண்டிப்பட்டதால் பதவி இழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.