திமுக ஆட்சி காலத்தில் உடன்குடி பவர் கார்பொரேஷன் (Special Purpose Vechicle SPV) ஏற்படுத்தப்பட்டு அதில் தமிழ்நாடு மின்சார கழகமும் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனம் சேர்ந்து இரு கட்டமாக 2 x 800, 4 x 660 என மொத்தம் 4240 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் வந்த அதிமுக 2011 ~2016 ஆட்சியில் இதனை அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா ஏற்று கொள்ள மறுத்து தமிழ்நாடு மின் கழகமே உற்பத்தி செய்யும் என்று சூளுரைத்து மத்திய அரசின் பெல்’ நிறுவனத்துடன் கருணாநிதி அரசு செய்த ஒப்பந்தத்தை தள்ளுபடி செய்தார்.
பின்னர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் பல்வேறு காரணங்களால் நடைபெறமால் இருந்த நிலையில் ஆளும் அதிமுக அரசு மறுபடியும் தலா 660 மெகாவாட் வீதம் மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்கள் ரூ.7 ஆயிரத்து 300 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கான பணி ஆணையை பெற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ‘பெல்’ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதுபோன்ற அதிநவீன மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை ‘பெல்’ நிறுவனத்திடம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வழங்குவது, கடந்த 3 ஆண்டுகளில் இது 4–வது முறை ஆகும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, உடன்குடியில், தலா 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய 2 அதிநவீன அனல் மின் நிலையங்களை ‘பெல்’ நிறுவனம் அமைக்கும். என்ஜினீயரிங், கொள்முதல், கட்டுமானம் (இ.பி.சி.) அடிப்படையில், இந்த திட்டத்தை நிறைவேற்றும்.
உடன்குடி பவர் கார்பொரேஷன் 2012 அன்றே தடை செய்யாமல் தொடங்கி இருந்தால் தமிழ்நாடு இந்நேரம் 4240 மெகாவாட் மின்சாரம் பெற்று இருக்கும்.
மேலும் அன்றைய திட்ட செலவு கோடிகள் 5.43 கோடி ரூபாய் / மெகாவாட்இன்றைய திட்ட செலவு 5.53 கோடி ரூபாய் / மெகாவாட்.
காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு அரசு செயல்பட்டு இருக்கும் பட்சத்தில் மின்சாரம் வெளியிடத்தில் வாங்கிய செலவு உள்ளிட்ட செலவுகளை கணக்கிட்டால் கிட்டதிட்ட சுமார் 3000 கோடி ரூபாய் அரசு சேமித்து இருக்கலாம்.
2010 அன்றே தொடங்கிய மின்சார உற்பத்தி திட்டத்தில்இப்பொது 30% மட்டுமே சுமார் ஆறு ஆண்டு காலம் கழித்து காலம் கடத்தி பெல் நிறுவனம் பெற்றாலும்,
இன்னும் நான்கு ஆண்டுகள் கழித்து இந்த திட்டம், தமிழ்நாடு வளர்ச்சி அடைவதற்கு துணைபுரிவதுடன், தமிழக மக்களுக்கு எளிதில் மின்சாரம் கிடைப்பதற்கு பேருதவியாக அமையும் என்றும் கருதப்படுகிறது.