கேரள மாநிலத்தில் இன்று காலை மீனவ கிராமங்களுக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, பாதிப்புக்குள்ளான இடங்களை பார்வையிட்டார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Special Correspondent

அதில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கேரள அரசுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அழிக்கவில்லை என கேரள மீனவ மக்கள் ராகுல் காந்தியிடம் குற்றம்சாட்டியுளனர். அதேபோல் மத்திய அரசு பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு உதவிசெய்ய வலியுறுத்தி ராகுல் காந்தியிடம் மனுக்களை அளித்துள்ளனர்.

குமரி மீனவர்களின் உடல்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் மனதைப் பதபதைக்கவைக்கிறது. மாயமான மீனவர்களை மீட்டுத் தரும்படி, மீனவக் குடும்பங்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட ராகுல்காந்தி குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியில் உள்ள மக்களோடு மக்களாக அமர்ந்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தூத்தூர் பகுதியில் ராகுல் வருகையையொட்டி பந்தல் எதுவும் போடப்படவில்லை என்பதால், வெயிலில் அமர்ந்திருந்த மக்களுடன் ராகுலும் அமர்ந்துகொண்டார். மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் ராகுலிடம் கண்ணீர் மல்க அவர்களின் நிலையை விளக்கினர். மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மனுவும் கொடுத்தனர். கடலில் மாயமான மீனவர் ஒருவரின் மனைவி, ராகுலின் கையைப் பிடித்துக் கதறிய காட்சி சுற்றியிருந்தவர்களைக் கண்கலங்கச்செய்தது.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் சின்னத்துறை மீனவ கிராமத்திற்கு சென்ற ராகுல் காந்தி, அங்கு ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அவரிடம் புயலில் மாயமான மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை எனவும், அவர்களை மீட்க உதவி செய்ய வேண்டும் எனவும் அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மீனவர்களுக்கென தனி அமைச்சர் இருந்திருந்தால் உங்கள் பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.