மணிசங்கர் அய்யர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன், இந்தியா-பாகிஸ்தான் உறவு குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தப்பட்டது. குஜராத் தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை என பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் பதிலளித்துள்ளார்.

Special Correspondent

குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை கொண்டுவர பாகிஸ்தான் சதி என்று மோடி கூறியதற்கு மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். அழைக்காமலேயே பாகிஸ்தானுக்கு சென்றுவந்தவர் மோடி என்று மன்மோகன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். குஜராத்தில் பாஜக தோற்கும் என்ற அச்சத்தில் மோடி ஏதேதோ பேசிவருகிறார்.

தமது செயல்கள் வெளிப்படையானவை என்று முன்னாள் மன்மோகன் சிங் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேசியம் குறித்து காங்கிரசுக்கு நரேந்திரமோடி பிரசங்கம் செய்யத் தேவையில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பதான்கோட் ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை மோடி நுழைய விட்டவர் என்று மன்மோகன் சிங் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் பதவிக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார் மோடி. நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மன்மோகன் சிங் அறிக்கையில் கூறியுள்ளார்.

குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக பிரதமர் மோடி நேற்று குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலர் முகம்மது பைசல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

உங்களின் நாட்டுக்குள் நடக்கும் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள். அனைத்திற்கும் பாகிஸ்தானை இழுத்து பேசுவதை இந்தியா நிறுத்த வேண்டும். பாகிஸ்தான் மீது பழி போடுவதை விடுத்து, உங்களின் தனிப்பட்ட பலத்தை காட்டி தேர்தலில் வெற்றி பெறுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியல் கார்ட்டூன்கள் மற்றும் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியின் பாகிஸ்தான் பேச்சை குறித்து " 22வருட பிஜேபி குஜராத் ஆட்சியில் ஏதும் கிடைக்கவில்லையா முன்னாள் பிரதமர் முன்னாள் வெளியுறவு செயலர்கள் முன்னாள் ராணுவ அதிகாரிகள் கூடி பேசியதை பிரதானமாக எடுக்க என்ன அவசியம்" என்ற கருத்துக்கள் தெறிக்க பதிவு செய்து வருகின்றனர்