ஓகி புயலில் சிக்கி தமிழக மீனவர்கள் கடந்த 8 நாட்களாக மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியில் அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். 30-க்கும் மேற்பட்ட படகுகளில் சிக்கி தவித்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர்.

Special Correspondent

இவர்கள் கடந்த 8 நாட்களாக உணவு உள்ளிட்ட எந்த வசதியும் கிடைக்காமல் அவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் 8 நாட்களுக்கு பின்மராட்டிய மாநிலம் ரத்னகிரிக்கு வந்த தமிழக அதிகாரிக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

8 நாளாக தமிழக அதிகாரிகள் வராத நிலையில் இன்று வந்துள்ள அதிகாரியும் கெடுபிடி செய்வதால் மீனவர்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழக அதிகாரியை முற்றுகையிட்டு மீனவர்கள் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர். காலையில் ரத்னகிரி வந்தவர், மீனவர்களை சந்திக்க பல மணி நேரம் தாமதித்ததாக புகார் தெரிவித்தனர்.

ரத்னகிரியில் கரை சேர்ந்துள்ள தங்களை சந்திக்க 8 நாள் தாமதம் ஏன் என்று மீனவர்கள் தமிழக அதிகாரியிடம் கேள்வி எழுப்பினர் . கேரள அதிகாரிகள் உதவும் நிலையில், தமிழகத்தில் இருந்து எந்த உதவியும் இல்லை என்று குற்றம் சாட்டிய மீனவர்கள், தமிழகத்தில் நடைபெறும் மீனவர்கள் போராட்டங்களை அடுத்து, அதிகாரி வருகையா? என்றும் கேள்வி எழுப்பினர்.

Special Correspondent

மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.2,000 உதவி தொகை வழங்கப்படும் என்று தமிழக அதிகாரி உறுதி அளித்தார். படகுகள் ஒவ்வொன்றுக்கும் தலா ஆயிரம் லிட்டர் டீசல் வழங்கப்படும் என்றும் தமிழக அதிகாரி மீனவர்களுக்கு உறுதி அளித்தார்.

முன்னதாக கடந்த இரு தினங்களாக குமரி மாவட்டத்தின் மீனவர்கள் தங்கள் குடும்பத்தில் காணாமல் போன ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை தெரியாமல் ரயில் மறுப்பு போராட்டத்தை கைவிட போவதில்லை என்று தெரிவித்து உள்ளனர்.