டெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தைத் திறந்துவைத்த பிரதமர் மோடி, இந்திய அரசியலமைப்பில் அம்பேத்கரின் பங்கு இன்றியமையாதது. ஆனால், அவரது புகழை ஒரு குடும்பம் இருட்டடிப்பு செய்துவிட்டது. இருப்பினும், அவரது புகழ் அனைத்து மக்களின் மனதிலும் நீங்காத இடம்பிடித்துள்ளது என காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்தார்.

Special Correspondent

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர், மோடியை ‘நீச் ஆத்மி’ என விமர்சித்தார். ‘நீச்’ என்றால் இந்தியில் நேரடியாகவே தீண்டத்தகாதவன் என்று அர்த்தப்படும். இது நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாஜக மூத்த தலைவர்கள் உட்பட பலரும் மணி சங்கர் ஐயரின் கருத்தை விமர்சித்திருந்தனர்.

லல்லு பிரசாத் யாதவ் மணி சங்கர் ஐயருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்றே தெரிவித்தார்.

இதற்கிடையில், குஜராத் தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, என்னைத் தீண்டத்தகாதவன் என விமர்சிக்கிறார்கள். முதல்வராகவும், பிரதமராகவும் நான் என்ன தீண்டத்தகாத வேலைகளைச் செய்துவிட்டேன். இதற்கு குஜராத் மக்கள் பதில் சொல்வார்கள் என்று நம்புகிறேன் என பேசினார்.

இதுகுறித்து ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மீது பாஜகவினர் அவதூறான வார்த்தைகளில் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். ஆனால், காங்கிரஸின் பாரம்பரியமும், கலாச்சரமும் முற்றிலும் மாறுபட்டது. மோடி குறித்து மணி சங்கர் ஐயர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து.. அதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்தக் கருத்துக்கு மணி சங்கர் ஐயரும், காங்கிரஸும் மன்னிப்பு கூறவேண்டும் என எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டிருந்தார்.

மிகப்பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கும் இந்தக் கருத்தை வெளியிட்ட மணிசங்கர் ஐயர், நான் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் இல்லை. மோடி கீழ்த்தரமான அரசியலை செய்து வருகிறார் என்றுதான் தெரிவித்திருந்தேன். எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்தார்.

சென்ற 2014 தேர்தலில் மோடி டீ விற்பவர் என்று கேவலமாக அய்யர் விமரிசித்ததும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்த குஜராத் தேர்தலில் போதும் மணி சங்கர் ஐயர் கூறிய இந்த கருத்தின் காரணமாக அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஹிந்து மனு சாஸ்திர முறைப்படி மோடி பிற்படுத்தபட்ட வகுப்பில் மற்றும் மணிசங்கர் அய்யர் உயர்வகுப்பில் வருவதால் இது பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வை புண்படுத்தும் என்பதால் ராகுல் காந்தி துணிச்சலாக மூத்த காங்கிரஸ் புள்ளியை அய்யரை நீக்கியது சரியான நடவடிக்கையே என்று அரசியல் வல்லுநர்கள் மற்றும் பல தரப்பட்ட சமூக வலை பதிவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.