கடந்த எழுஆண்டுகளாக உள்தாள் ஒட்டியே தமிழ்நாட்டிலே பல தரப்பட்ட மக்கள் கண்டனத்துக்கு இடையே அதிமுக அரசால் செயப்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க `ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டது.
இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 60 சதவீதம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கவில்லை.
இந்நிலையில் ரேஷன் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி 1ம்தேதி முதல் ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொதுவிநியோக பொருட்கள் வழங்கவேண்டும். பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு பொதுவிநியோகத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
எனவே ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இ சேவை மையங்கள் மூலமும், பொதுவிநியோகத்துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்மார்ட் ரேஷன் கார்டு பற்றி தகவல் அறிய, விஜயம் செய்து பயனாளர் நுழைவு சென்று மொபைல் நம்பர் பதிவு செய்து பார்த்தால் விவரம் தெரியும்.
தங்களது குடும்ப அட்டை ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு தங்களது கைபேசி எண் பதிவு செய்யப்படவில்லை என்றால், 1967/18004255901 என்ற எண்ணில் உதவி மையத்தை தொடர்பு கொள்ளவும் என்று அரசு இணையதளத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.