ஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அங்கீகரிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
புதன்கிழமையன்று முன்பாக, வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப் அமெரிக்காவின் நீண்ட கால பாரம்பரியத்தை தகர்த்து இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிரந்திர அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால நிலைப்பாட்டில் இருந்து விலகிச்செல்லும் நடவடிக்கையாக கருதமுடியாது என தெரிவித்தார். அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்ரேலும், பாலத்தீனர்களும் ஒப்புதல் அளித்தால், இரு தேச தீர்வு திட்டத்திற்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு ஜெருசலேம் 1967-ம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரின் போது, இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால், இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. அமெரிக்காவின் முஸ்லிம் கூட்டாளி நாடுகளின் எதிர்ப்பையும் மீறி டிரம்பின் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
டிரம்ப்பின் அ றிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இஸ்ரேல் அதிபர் டிரம்பிற்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக டிரம்பின் இந்த அறிவிப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட பாலத்தீன தலைவர் மெஹமுத் அப்பாஸின் செய்தி தொடர்பாளர், ''இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்று எச்சரித்துள்ளார்
முதலாம் உலகப் போரின்போது பாலஸ்தீனப் பகுதியை உள்ளடக்கியிருந்த ஒட்டோமானிய அரசு ஜெர்மனியை ஆதரித்தது.
ஜெர்மனியும் அதன் கூட்டுநாடுகளும் போரில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பிரித்தானிய மற்றும் பிரான்சு அரசுகள் பாலஸ்தீனத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டன.
1917இலிருந்து 1948 வரை அங்கு ஆதிக்கம் செலுத்திய பிரித்தானிய அரசு ஆட்சியைக் கைவிட்டபோது அரபு-இஸ்ரேல் எல்லைகள் வரையறுப்பது பற்றிய தெளிவு இருக்கவில்லை.
1948இல் நிகழ்ந்த அரபு-இஸ்ரேல் எல்லை போரின் விளைவாக வரையப்பட்ட எல்லைக்கோட்டின்படி, ஜெருசலேமின் பழைய நகர்ப்பகுதி முழுவதும் யோர்தான் நாட்டு எல்லைக்குள் வந்தது.
ஆனால், 1967இல் நிகழ்ந்த ஆறு நாள் போரில் இஸ்ரேல் ஜெருசலேமின் பழைய நகர்ப்பகுதியையும் கிழக்குப் பகுதியையும் யோர்தானிடமிருந்து கைப்பற்றித் தன்னோடு இணைத்துக்கொண்டது.
இவ்வாறு இணைத்துக்கொண்டதை பன்னாட்டுச் சட்டத்தின் அடிப்படையில் UNO , உலக நாடுகள் சட்ட மீறுதலாகக் கருதின.
கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனப் பகுதி என்றும், அது தற்போது இஸ்ரேல் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பன்னாட்டுச் சட்டக் கருத்து உள்ளது. ஆனால், ஜெருசலேம் முழுவதும் இஸ்ரேல்க்கே சொந்தம் என்று இஸ்ரேல் நாடு உரிமை பாராட்டுவதோடு, 1980இல் "ஒருங்கிணைக்கப்பட்ட ஜெருசலேம் நகரம் இசுரயேலின் தலைநகராய் இருக்கும்" என்றும் அறிவித்துச் சட்டம் இயற்றியது.
1967இல் இஸ்ரேல் கைப்பற்றிய கிழக்கு ஜெருசலேம் பகுதியாவது தம் ஆட்சிக்கு உரியது என்று பாலஸ்தீனியர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். இஸ்ரேல் அரசின் முதன்மை நிறுவனங்கள் எருசலேமில்தான் உள்ளன. க்னெஸ்ஸெட் என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் போன்றவை மேற்கு எருசலேமின் "புதிய பகுதியில்" அமைந்துள்ளன.
2000 ஆண்டளவில் இஸ்ரேல்க்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே அமைதி கொணரும் முயற்சியாக, ஜெருசலேமின் அரபுப் பகுதிகள் பாலஸ்தீனத்துக்குச் சேர வேண்டும் என்றும், ஜெருசலேமின் யூதப் பகுதிகளை இசுரயேல் தக்கவைத்துக் கொள்ளும் என்றும், இரு தரப்பினரும் கோவில் மலை என்னும் பகுதியின் கீழ் நிகழும் அகழ்வாய்வுகளை இணைந்து நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.
கொள்கையளவில் இப்பரிந்துரை ஏற்கப்பட்டது, ஆனால் நடைமுறையில் ஒன்றும் நிகழவில்லை. ஜெருசலேமின் புனித இடங்கள் பாலஸ்தீனக் கட்டுப்பாட்டுக்குள் வருவதை இஸ்ரேல் எதிர்க்கிறது.
அதுபோலவே, கிறித்தவ மற்றும் இசுலாமிய புனித இடங்கள் இஸ்ரேல்லின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்போது அம்மதங்களைச் சார்ந்தவர்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதில்லை என்று பாலஸ்தீனம் முறையிடுகிறது.
இஸ்ரேல்க்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து நிலவுகின்ற மோதலில் ஹமாஸ் மற்றும் ஹெஸ்புல்லா ஆகிய தீவிர இயக்கங்களும் ஈடுபட்டுள்ளன.
இன்றைய சூழ்நிலையில், டொனால்ட் டிரம்ப்யின் அதிகாரப்பூர்வமாக இஸ்ரேல் சார்பு அறிக்கை அரபு தேசத்தினர் இடையிலே மன வருத்தத்தையும் கொந்தளிப்பயும் ஏற்படுத்தும் என்று சர்வேதேசே வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்