கடலூர் அருகே ராசாப்பேட்டை மீனவர் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.

Special Correspondent

அப்போது அவர்கள் கேரளாவுக்கு மீன் பிடித்தொழில் செய்ய சென்று ஓகி புயலில் காணாமல் போன கடலூர் ராசாப்பேட்டை மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கதறி அழுதனர்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தலைவிரி கோலமாக ஒப்பாரி வைத்து கதறி அழுதது பார்ப்பவர் கண்களை குளமாக்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாவிடம் கதறி அழுதவாறே அவர்கள் மனு அளித்தனர்.

அந்த மனுவில், ராசாபேட்டையை சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த மாதம் 22ம் தேதி கேரளாவுக்கு மீன்பிடி தொழிலுக்காக சென்றனர்.,24ம்தேதி சென்று சேர்ந்ததாக அங்கிருந்து தகவல் அளித்தனர். அதன்பிறகு அவர்களின் நிலை குறித்து தெரியவில்லை.

Special Correspondent

இதற்கிடையே ஓகி புயலின் போது ராசாப்பேட்டை மீனவர்கள் அடங்கிய 10 பேர் படகில் மீன்பிடிக்க சென்று கடலில் புயலில் சிக்கி தவித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அவர்களை கண்டுபிடுத்து தரவேண்டும், இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்களிடம் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் அவர்கள் வந்து சேர்வார்கள் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த நிலையில் மாநில அரசு மற்றும் மத்திய அரசு காணாமல் போன மீனவர்கள் அறிவிக்கும் தகவல்கள் முரண்படுவதாக போராட்டத்தில் குதித்த குமரி மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

2500 மேல மீனவர்கள் காணவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள் . ஆனால் மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசு ஓகி புயலால் பெரும் இழப்பை சந்தித்த குமரி மீனவவர்களை கண்டு கொள்ளாமல் கோவையில் தடபுடலாக எம்ஜியார் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருவதாக வேதனையுடன் குமரி மாவட்ட மீனவ குடும்பங்கள் கண்ணீருடன் தெரிவித்தன.