உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன், கடந்த மே 23 ஆம் தேதி இறைச்சிக்கு மாடுகளையும் ஒட்டகங்களையும் விற்கவோ, வாங்கவோ தடை விதித்து மோடி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு மே 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை தடை விதித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. ஆனால், ஜூலை 30 ஆம் தேதி உச்சநீதிமன்றமும் இந்த உத்தரவை உறுதி செய்தது. அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் மாடுகள் விற்கவோ, வாங்கவோ தடை இல்லை என்று அறிவித்து.
இதையடுத்து, ஆகஸ்ட் 30 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த மோடி அரசு, இந்த தடைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரப் போவதாக உறுதியளித்தது.
இந்நிலையில் மாட்டிறைச்சிக்கு மாடுகளை விற்க தடை விதிக்கும் அறிவிக்கையை திரும்பப் பெறுவதாக மோடி அரசு அறிவித்து, 2017 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட G.S.R. 493(E) அறிவிக்கையை திரும்பப் பெறுவதாகத்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது.
அந்த அறிவிக்கைக்குள்தான் மாட்டிறைச்சித் தடை உத்தரவும் இருக்கிறது. இந்த விவகாரத்தில், பாஜகவின் குஜராத் தேர்தல் பயம் வெளிப்பட்டுவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.