புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேர் வருகை தந்துள்ளனர்.

Special Correspondent

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன உறுப்பினர்களாக பாரதிய ஜனதாவை சேர்ந்த மாநில தலைவர் சுவாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகிய 3 பேருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடந்த ஆண்டு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தது ஏற்கமுடியாது எனக் கூறி பாரதிய ஜனதா உறுப்பினர்கள் பேரவைக்கு வர சபாநாயகர் வைத்திலிங்கம் அனுமதி மறுத்தார்.

இதனை அடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மறுத்ததால் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் பாஜக உறுப்பினர்கள் பேரவைக்கு செல்ல தடை விதிக்க முடியாது என கூறினார்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி 3 நியமன உறுப்பினர்களையும் பேரவைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நிதி மசோதாவுக்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.க. உறுப்பினர்கள் 3 பேருக்கு பேரவை செயலாளர் அனுமதி வழங்கினார்.

3 நியமன உறுப்பினர்களையும் பேரவைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நிதி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கிய விவகாரம் ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டிதுள்ளன.

தொடர்பு செய்திகள் : பாஜக நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரையும் காவலர்கள் தடுத்து நிறுத்தம்