சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இந்து சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Special Correspondent

2013-ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டார். ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கை எஸ்சி, எஸ்டி வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பளித்த ஜோத்பூர் நீதிமன்றம், சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று தீர்ப்பளித்து. இந்த வழக்கில் துணை குற்றவாளிகளாக அறியப்பட்ட சரத், ஷில்பி ஆகியோரையும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. சாமியார் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியாருக்கு ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளான சரத் மற்றும் ஷில்பிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சாமியாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள நிலையில் வட மாநிலங்களில் பாதுகாப்பு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாமியார் ஆசாரமுடன் மோடி இருக்கும் வீடியோவால் சர்ச்சை வெடித்துள்ளது. சாமியார் ஆசாராம் பாபுவிடம் நரேந்திரமோடி ஆசிபெறும் காட்சி வீடியோவில் உள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுக்கு ஜோத்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றவாளி என அறிவித்தவுடன் இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி டுவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவேற்றியது. அதில் ஆசாராம் உடன் பிரதமர் மோடி மேடையில் ஒன்றாக நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க. பழைய வீடியோவை வெளியிட்டு அரசியல் ஆதாயம் தேட காங்கிரஸ் முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.