கிழக்கிந்திய மாநிலங்கள் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுகின்றன என நிதி ஆயோக் தலைவர் கூறி உள்ளார்.

Special Correspondent

நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் " வட இந்திய மாநிலங்களை காட்டிலும், தென்னிந்திய மாநிலங்களின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கிறோம்.

மனித வளர்ச்சி குறியீட்டில் 188 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியாவிற்கு 131 வது இடம்.

கிழக்கு பகுதி மாநிலங்கள் குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளுகின்றன.

இந்தியாவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்கள் நியாயமான விதமாகவும் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தியா பின்னால் பின்தங்கிய மாநிலங்களில் கல்வி மற்றும் உடல்நலம் முக்கியமாக பின்தங்கி உள்ளது என கூறினார்.

திராவிட கட்சிகள் தமிழகத்தை பின்னோகி செலுத்தி விட்டன என பாஜக கட்சியினர் தொடர்ந்து கூறி வந்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ச்சி அடைந்து நிலையில்,பாஜக பல ஆண்டுகளாக தொடர்ந்து ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் பின் தங்கி உள்ளதாக மத்திய மோடி அரசின் நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் கூறி இருப்பது பாஜக வினர் சொல்லி வருவது பொய் என்று ஆகி விட்டது என்று தெரியவருகிறது என பதிவிட்டு வருகின்றனர் சமூகவலைதளத்தில்.