சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் ட்விட்டர் பக்கத்தை 43 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஐபிஎல் அணிகளில் மும்பைக்கு அடுத்ததாக (49 லட்சம்) சென்னைக்குத்தான் ட்விட்டரில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள்.

Special Correspondent

ட்விட்டரில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு வெளியேயும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். அவர்களில் சிலருக்கு மட்டும்தான் தமிழ் புரியும்.

எனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிடும்போது ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் வெளியிடவும் என்கிற ரசிகரின் கோரிக்கைக்கு சிஎஸ்கே நிர்வாகம் அளித்த பதில்:

ஆங்கிலம் ஓகே. ஆனால் ஹிந்தி கொஞ்சம் கொஞ்சம்தான் தெரியும் என்று அந்த ரசிகருக்கு ஹிந்தியிலேயே பதில் அளித்துள்ளது சிஎஸ்கே.

இந்தப் பதில் பலருடைய பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஹிந்தியில் பதிவு எழுதமுடியாது என்பதை ஹிந்தியிலேயே பதில் அளித்து தனது தமிழ் பற்றை நிரூபித்துள்ளது சிஎஸ்கே என்று ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்