சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு விசாரணைக்கு ஆஜராக கூறி முன்னாள் மத்தியமைச்சர் பா.சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்துக்கு அனுப்பபட்ட சம்மனை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Special Correspondent

கொல்கத்தாவில் சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கப்பிரிவு 2வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் வழக்கு தொடர்ந்திருந்தார். சட்டப்படி தன்னிடம் நேரில் வந்துதான் விசாரிக்க வேண்டும், என்னால் கொல்கத்தா செல்ல முடியாது என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அமலாக்கத்துறையின் மனுவை ரத்து செய்ய மறுத்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

புதிய சம்மன் ஒன்றை அனுப்புமாறும் அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொல்கத்தாவை மையமான கொண்டு சுதீப்தா சென் என்பவர் நடத்திவந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 30,000 கோடி வரை மோசடி செய்ததாக குற்றம் சாட்டபட்டது.

இந்த வழக்கில் 6வது துணை குற்ற பத்திரிக்கையில் முன்னாள் மத்தியமைச்சர் சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரத்தை சிபிஐ சேர்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நளினி சிதம்பரம் ஏற்கனவே அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் புதிய சம்மன் கிடைக்க பெறும் போது அதில் குறிப்பிட்ட நாளில் நளினி சிதம்பரம் ஆஜராக வேண்டியது வரும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.