திருவனந்தபுரத்திலிருந்து சென்னை வரும் ரயிலில், 9 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக பிரமுகர் கைது.
2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், ஆர்கே நகர் தொகுதி பிஜேபி வேட்பாளராக போட்டியிட்டவர் பிரேம் ஆனந்த். இவர் ரயிலில் பயணம் செய்கையில், பெற்றோரோடு பயணித்த, 9 வயது குழந்தையை பாலியல் ரீதியாக இரவு நேரத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
அந்தக் குழந்தை கத்தி கதறி அழுது பெற்றோரை எழுப்பியதும், உடனடியாக ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
பிரேம் ஆனந்த், தான் வழக்கறிஞர் என்றும், பிஜேபியில் பெரிய தலைவர் என்றும், ஆர்எஸ்எஸ்-ல் பெரிய தலைவர்களைத் தெரியும் என்றும் பெற்றோரை மிரட்டியுள்ளார்.
ஆனால் அங்கு உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அவரை காவல்துறையினர் உடனடியாக அவரை பாஸ்கோ சட்டத்தில் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
பிரேம் ஆனந்த் மகாபலிபுரத்தில், PEPJ Indian Beach Resort என்ற சொகுசு விடுதியை நடத்தி வருகிறார்.
தமிழகத்தின் பாஜக தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்தபோது, வானதி சீனிவாசன் அவர்கள், சென்னை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்தார்.
அப்போது, பிரேம் ஆனந்தை தென் சென்னை மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராக Prabari (பிரபாரி என்றால் சமஸ்கிருதத்தில் பொறுப்புக்கு உரியவர் என்று பொருள்) நியமித்தார்.
வானதி அந்தப் பொறுப்பில் இருந்தவரை, பிரேம் ஆனந்த் அந்த பதவியில் தொடர்ந்தார்.காஷ்மிர் ஆசிபா 8 வயது சிறுமியை பாலியல் மற்றும் கொலை செய்த 8 பேருக்கு பாஜக அமைச்சர்கள் அதரவு தந்தும்,
மற்றும் உத்திர பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவரே 17 வயது சிறுமியை பாலியல் கூட்டாக அவரின் சகாக்களோடு செய்து அதனை தட்டி கேட்ட அப்பெண்ணின் தந்தையை அடித்தே கொலை செய்த நிலையயில் நீதிமன்றம் கண்டித்து பிறகே கைது செய்ய பட்டதும் குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : தொடர் பாலியல் பிரச்சனையில் சிக்கும் பாஜக...