பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் எதிர்ப்புக்கு பயந்து 2-வது நாளாக வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளார். வீட்டின் மீது கல்வீசப்பட்டதால் வீட்டை விட்டு வெளியே வர எஸ்.வி.சேகர் அச்சமடைந்துள்ளார்.
வழக்கில் முன்ஜாமின் கோர எஸ்.வி.சேகர் திட்டமிட்ட உள்ளதாகவும் முன்ஜாமின் பெற்றப்பிறகே எஸ்.வி.சேகர் வெளியே வருவார் என தகவல் தெரிவிக்கின்றன.
இதன் இடையே எஸ்.வி.சேகரை கைது செய்யும் வரை போராட்டத்தைத் தொடர ஊடகத்தினர் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஊடகவியலாளர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர்.
நேற்று ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும், மீடியாவில் பணியாற்றும் பெண்களைப் பற்றியும் தரக்குறைவாகப் பேசிய காமெடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் கடும் கண்டனம் தெரிவித்தது.
சேலம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் "எஸ்.வி.சேகர் பத்திரிகையாளர்கள் குறித்து எழுதியது மிகப்பெரும் தவறு, என்னைப் பொறுத்தவரை அது மன்னிக்க முடியாத குற்றம் என கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், பெண்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டு பின் மன்னிப்புக் கேட்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூக வலைத்தளங்களில் ஒரு கருத்தை பதிந்துவிட்டு, அதனை நீக்கிவிட்டாலும் அக்கருத்து பரவிக்கொண்டேதான் இருக்கின்றது. இனிமேல் இப்படி யாரும் செய்யக்கூடாது என வன்மையாக கண்டித்து பதிவு செய்கிறேன். இத்தகைய செயல்களில் யாரெல்லம் ஈடுபடுகிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.வி.சேகா் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
பாஜகவில் இருக்கும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர் ஆகியோரின் தனிப்பட்ட கருத்துகளை ஒட்டுமொத்த பாஜகவின் கருத்து என சித்தரித்து தலைமைக்கு எதிராக போராட்டம் நடத்துவது சரியானது அல்ல, என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் எஸ்.வி.சேகரின் அண்ணி கிரிஜா தமிழக தலைமைச் செயலாளராக இருப்பதால் கைது செய்யவது தள்ளி போவதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் முன் ஜாமின் தள்ளுபடி செய்ய படும் பட்சத்தில் எஸ்.வி.சேகர் கைது செய்யபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது... இது தொடர்பாக அதிமுக அமைச்சர் ஜெயகுமார் எஸ்.வி.சேகர் மற்றும் எச் ராஜா இருவரும் சைபர் சைக்கொ என்றும் கூறி அவர்கள் மீது அரசே வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளும் என கூறியதும் குறிப்பிடதக்கது.
மேலும் எஸ்.வி.சேகர் மூ வர்ண தேசிய கொடியை மற்றும் அரசு முத்திரையை பயன்படுத்தி மன்னிப்பு கோரியதும், அவருக்கு இந்திய சட்டத்தின் offence U/S 3 of State Emblem of India - Prohibition of Improper use act 2005 மீறல் சட்ட சிக்கலை உருவாக்கும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர் செய்திகள் :ஒடி ஒளியும் எஸ் வி சேகரை பாதுகாப்பது அவரது அண்ணி தலைமை செயளாலர் கிரிஜவா