எதிர்வரும் நாடாளுடன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் உடன் இணைந்து செயல்படுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடைபெற்று வரக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மத்திய குழு மாநாட்டில் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கொண்டு வந்த திருத்தத்துடன் அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்துத்துவா சக்திகளை வீழ்த்த நாடாளுமன்றத்தில் உள்ளேயும், வெளியிலும் காங்கிரஸ் உடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட உள்ளது. இதற்கு பிரகாஷ் காரத் தரப்பு முதலில் அதிருப்தி தெரிவித்திருந்தாலும் யெச்சூரியின் திருத்தத்திற்கு கட்சியின் மத்திய குழுவில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி தொடங்கிய 1969-ம் ஆண்டில் இருந்து இல்லாத வகையில் முதல்முறையாக கட்சியின் அரசியில் தீர்மானம் திருத்தப்பட்டிருப்பது சீத்தாராம் யெச்சூரிக்கு மிகப்பெரிய வெற்றியாக கருப்படுகிறது. இதன்மூலம் அவர் மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 5 நாள் மாநாட்டின் இறுதி நாளான நாளை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்தரபிரதேச மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 24, 2018 நடைபெற்றது. இதில் குறுக்கு வழியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை பாஜக பணத்தின் மூலம் விழ்த்தியது என்று சமாஜ்வாதி கட்சி கூறியது.
லக்னோ நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாயவதி, பா.ஜ.க.வின் தந்திரத்தால், மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெற முடியாமல் போனதாகவும், இதைவைத்து சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையிலான உறவை பிரித்துவிட முடியாது என குறிப்பிட்ட நிலையில் அந்த இரு கட்சிகளும் இணைந்து போட்டி இடுவது என்ற நிலையில்...
இப்போது பாஜகா தவிர எல்லா கட்சிகளும் ஒன்று இணைவது மட்டும் இல்லை பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக விலகுவதும் பாஜக தலமைக்கு அதிர்ச்சி தந்துள்ளாதாக அக்கட்சியினர் கவலை தெரிவித்துள்ளனர்.