பாராளுமன்றத்தில் லோக்பால் சட்டம் 2013-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்.

Special Correspondent

ஆனால், ஜெயலலிதா அதிமுக அரசு தமிழகம் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் இன்னும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

விசாரணையின்போது, தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை ஏன் அமைக்கவில்லை என்பது தொடர்பாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்கப்படாமல் இருப்பதற்கு தமிழக அரசு முன்வைக்கும் காரணங்கள் ஏற்கும்படியாக இல்லை என உச்ச நிதிமன்றம் தெரிவித்தது.

‘லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். லோக் ஆயுக்தா அமைக்கும் நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் தமிழக தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைத்து விட்டால் சாமனியார்கள் கூட தன் மீதும் ஆளும் கட்சி அமைச்சர்கள் மீதும் வழக்கு தொடங்க முடியும் என்பதால் ஜெயலலிதா இதனை தவிர்த்த நிலையில் இப்போது இதே வழியில் செல்ல நினைத்தும் ,உச்ச நீதிமன்றத்தில் போராடியும் லோக் ஆயுக்தா எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு இது பெரும் தலைவலியாக வந்து விழும் என்று சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.