சென்னை ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கமளித்துள்ளார். காவிரிக்காக போராட்டம் நடந்து வரும் தமிழகத்தில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என கூறி கடந்த 10-ம் தேதி சென்னை அண்ணா சாலையில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் போராட்டக்காரர்கள் மீது தடியடியில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரை தாக்கியதாக கூறப்படுகிறது.

Special Correspondent

மேலும் இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம், களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என ஏராளமானோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஆனால் சீமான் மீது மட்டும் கூடுதலாக, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் சீமான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கைத்துக்கு பயந்து போன சீமான் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியது நாம் தமிழர் கட்சியினர் இல்லை என்று பல்டி அடித்தார்.

Special Correspondent

முன்னதாக அவர் கட்சியினர் காவலர்களை தக்கியது நாங்கள் தான் என்று சமூகவலைதளத்தில் கூறி வந்தது கூறிபிடதக்கது.

தமிழகம் முழுவதும் உள்ள நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்படுகின்றனர். இது அறம் சார்ந்ததல்ல. ஏராளமான பொய் வழக்குகள் நாம் தமிழர் கட்சியினர் மீது தொடரப்பட்டுள்ளது. காவல்துறையினரை தாக்கியது எந்த கட்சி, எந்த அமைப்பு என தெரியாமல் நாம் தமிழர் மீது குறை சொல்வது கண்டிக்கத்தக்கது. காவலர்களை தாக்கியது என் கட்சிக்காரராக இருந்தால் நானே காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பேன்.

காவலர்களை தாக்கியது யார் என விசாரித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் தமிழர் ஒன்றும் வன்முறை கட்சி அல்ல. போலீசாரை தாக்குவதற்கு தான் நாங்கள் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோமா? தாக்குதலை விலக்கிவிட்ட என் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள் என்று சீமான் வேதனை பொங்க கூறினார்.