காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் எதிர்கட்சிகள் முதல் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் உன அனைத்து தரப்பினரும் போராட்டம், முற்றுகை பொதுகூட்டம் என நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஜல்லிகட்டு போரட்டத்திற்கு வரலாறு காணாத வகையில் கூடிய திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென அப்பகுதியில் கூடியதுடன், சாலையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் தொடங்கினர்.
நிமிடத்துக்கு நிமிடம் மாணவர்கள், அந்த வழியே செல்லும் பொதுமக்கள் எல்லாம் அப்படியே போராட்டத்தில் கலந்து கொண்டதால் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார், மாணவர்களை கலைந்துச் செல்ல முயன்றனர்.
மேலும் இந்த இடம் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த இடம் என்பதால் போலிசார் மிகவும் கூடுதல் பதட்டத்துடன் இருந்தனார் இதனையடுத்து போராட்டம் நடக்கும் இடத்தை கண்டோன்மென்ட் ஏசி சச்சிதானந்தம், இன்ஸ் விஜயாஸ்கர், நிக்சன் ஆகியோர் தலைமையில் போலீஸார் படை சுற்றி வளைத்ததுடன் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. பல மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டது.
முன்னதாக திருச்சி பட்டாபிராமன் தெருவில் அரசு பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை அருகே கர்நாடக பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் திருச்சி நீதிமன்ற வளாகம் கலவர இடமாக மாறியது.
மாணவர்களை விரட்டி அடித்ததில் பல பேர் செல்போன்கள் பறந்து விழுந்தது, போலிசின் அடிக்கு பயந்து ஓடியவர்களின் பைக்குளை எல்லாம் விட்டுவிட்டு சென்றனர்.
இது போலவே அண்ணமலை பல்கலை மாணவர்கள் மீதும் தடியடி நடந்தது குறிபிடதக்கது...
தடியடி நடத்தினாலும் பல்வேறு இடத்தில் திரும்பவும் மாணவர்கள் போலிசாருக்கு பெரும் தலைவலியாக விடிந்து உள்ளது என்று காவல் துறை வாட்டரங்கள் தெரிவிக்கின்றன...