பாலியல் வன்புணர்வு, தந்தை கொலை, உ.பி-யில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி... கண்டுகொள்ளாத போலீஸ்.

Special Correspondent

தன்னை பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் ஒருவருடத்திற்கு முன்பு பாலியல் வன்புணர்வு செய்தார் என்று சிறுமி ஒருவர் குற்றச்சாட்டு வைத்தார். இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பெண் குடும்பத்தோடு உத்தர பிரதேச முதல்வர் யோகியின் வீடு முன்பு சென்று தீ குளிக்க முயன்றார்.

ஆனால் எம்.எல்.ஏ குல்தீப் மீது போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த இந்நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு குல்தீப்பின் சகோதரரும், சில பாஜக ஆட்களும் அந்த பெண்ணின் தந்தை சுரேந்திர சிங்கை தாக்கி உள்ளனர். ஆனால் போலீஸ் பாஜக ஆட்களை கைது செய்யாமல் சுரேந்திர சிங்கை கைது செய்தது.

போலீஸ் நிலையத்தில் இருந்த சுரேந்திர சிங்கின் உடல் நிலை காயம் காரணமாக மோசமாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். அவர் போலீஸ் அடித்ததில் மரணம் அடைந்தாரா, பாஜக உறுப்பினர்கள் தாக்கியதில் மரணம் அடைந்தாரா என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

உத்தர பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தினர், அவர்களின் சொந்த கிராமத்திற்குள் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக கட்சியினர் இந்த மோசமான செயலை செய்து வருகின்றனர்.

இப்போதுவரை இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சோனு, பாவ், வினித், ஷைலு ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏவின் தம்பி தற்போது போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திரா சிங்கிங் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பாஜக கட்சியை சேர்ந்த அணில் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்காக தற்போது குல்தீப் பெயில் கேட்டு விண்ணப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Special Correspondent

அதே சமயம், அந்த பெண்ணின் குடும்பத்தினர் தாங்கள் எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். ஊருக்குள் சென்றால், தங்களை கொல்ல ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். நாங்கள் சாப்பாடு வாங்க கூட வெளியே செல்ல முடியவில்லை. பாஜக ஆட்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணின் குடும்பத்தை குல்தீப் ஆட்கள் மீண்டும் கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். அவர்களின் சொந்த கிராமமான மாகியில் இதற்காக நூற்றுக்கணக்கான அடியாட்கள், பாஜக கட்சியினர் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த குடும்பம் ஊருக்குள் வந்தால் மக்கள் அவர்களுடன் சேர வாய்ப்பு இருக்கிறது என்று இப்படி செய்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் இருந்து ஆண்கள் வெளியேறி உள்ளனர். இந்த வழக்கில் பாஜக கட்சியினர், தேவையில்லாமல் இந்த ஊர் ஆண்கள் மீது பழியை போட்டு வழக்கை முடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டதால் அவர்கள் இந்த செயலை செய்துள்ளனர். 50க்கும் அதிகமான ஆண்கள் இதுவரை வெளியேறியுள்ளனர்.

தற்போது அந்த பெண்ணின் குடும்பத்திற்கு மாவட்ட நீதிமன்றம் தற்காலிக இடம் கொடுத்துள்ளது. ஆனால் இத்தனை சம்பவங்கள் நடந்தும் கூட பாஜக கட்சியை சேர்ந்த குல்தீப் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் கூட அந்த பெண்ணின் தந்தையை அடித்த வழக்கின் கீழ்தான் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சமூகவலைதளத்தில் பலரும் கண்டித்த நிலையில் அந்த பாஜக எம்.எல்.ஏ குல்தீப் தான் ஆர்எஸ்எஸ் பயிற்சி பெற்றவர் என்றும் தன்னை ராணுவமே நினைத்தாலும் கைது செய்ய முடியாது என்றும் கூறி வருகிறராம்...