நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றிப் பெற்ற அறம் படத்தின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது. ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். அறம் முதல் பாகத்தை தயாரித்த கோட்டப்பாடி ராஜேஷ்தான் அறம் 2 படத்தையும் தயாரிக்கிறார்.

Special Correspondent

மக்கள் பணியை சரியாகச் செய்ய முடியாத மாவட்ட கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களைச் சந்திக்க நயன்தாரா புறப்படுவது போல முதல் பாகத்தை முடித்திருந்தார் இயக்குநர் கோபி.

அதன் தொடர்ச்சியாக அறம் இரண்டாம் பாகத்தில் தமிழகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகள், மத ரீதியிலான வன்முறைகளுக்கு எதிரான காட்சிகள் அதிகமிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வழங்கும் அதிகாரத்தை வைத்து இந்த கொடுமைகளை எப்படி நயன்தாரா ஒழிக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள்.

அம்பேத்கரின் அரசியலை வலிமையாக எடுத்துரைக்கும் படமாக அறம் 2 உருவாக உள்ளது. மேலும் அறம் முதல் பாகத்தை போலவே, இப்படமும் அரசியல் கருத்துகளை எடுத்துரைக்கும் வெற்றி படமாகும் என்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன் குறுகிய காலப் படம் ஒன்றை கோபி நயினார் உருவாக்கப் போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.