சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. ஐபிஎல் 2018-ஆம் ஆண்டுக்கான போட்டிகள் வருகிற 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 7 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இவற்றில் 3 பகல் ஆட்டங்களும், மீதமுள்ளவை இரவு பகல் ஆட்டங்களாக நடைபெற உள்ளது.

Special Correspondent

சூதாட்ட புகாரில் சிக்கியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளாக விளையாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த தடை இந்த ஆண்டு விலகியது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஸ்டேடியத்துக்கு வந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதற்காக நேற்றிரவு முதல் ரசிகர்கள் மைதானத்தின் வாசலில் காத்து கிடந்தனர்.

இங்கு ஒருவருக்கு இரு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் ரூ. 1300 முதல் ரூ.6500 வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் விலை கூடியிருந்தாலும் 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடப்பதால் முதல் நாள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் அனைத்து ஆட்டங்களுக்கான டிக்கெட்டுகளும் எளிதில் விற்றுவிடும் என தெரிகிறது.

எனினும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறயுள்ள ஆட்டங்களுக்கான டிக்கெட் விலை மற்ற நகரங்களை விடவும் சென்னையில் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் #IPL2018, அடுத்தவன் ஆசையை எப்படி பணம் ஆக்கி லாபம் பார்ப்பது, #ChennaiIPL #unfairticketpricing பாத்து கத்துகிடனும் என்று ஒரு ரசிகர் ட்விட் செய்திருந்தார். எதன் அடிப்படையில் ரூ.1300 என்கிற மற்றொரு கேள்விக்கும், ட்விட்டரில் சிஎஸ்கே நிர்வாகத்தின் பதில்:
மற்ற ஐபிஎல் மையங்கள் ஜிஎஸ்டி மட்டும் தான் வசூலிக்கிறது. இங்கு ஜிஎஸ்டியுடன் உள்ளூர் வரியையும் சேர்த்து வசூலிப்பதால் கட்டணம் அதிகமாக உள்ளது.

குறைந்தபட்சம் அடிப்படை விலை- ரூ.762 + உள்ளூர் கேளிக்கை வரி- ரூ.254 + ஜிஎஸ்டி- ரூ.284 = ரூ.1300.

Special Correspondent

விலை சர்ச்சைகள் இருப்பினும், மஞ்சள் ஜெர்சியை தல டோணி போடுவதை எண்ணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.