நேற்று திடீரென்று வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டமும், சாலைமறியலும் திமுகாவல் கட்டமைக்கப்படுகின்றது. முன் அனுமதி பெறாமல் செய்த போரட்டம் என்பதால் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட நுற்றுக்கணக்கான திமுக-வினர் கைது செய்யப்படுகின்றனர்...
கைது செய்யப்படும் முன்பே மு.க. ஸ்டாலின் சொன்னது இனி நாள், நட்சத்திரம், தேதி, இடம் எல்லாம் சொல்லி போராட்டம் நடக்காது, கைது செய்து விடுவித்தால் அடுத்த நிமிடமே போராட்டம் தொடரும் தமிழகம் முழுக்க திமுக-வினர் போராடுவார்கள் என்று அறிவித்து கைதாகிறார்.
அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும், திமுகழக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடப்பதாக டீவியில் செய்திகள் வருகிறது.
காட்டப்பட்ட காணொளிகளில் எல்லாம் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் தலைமையில் சுமார் 100ல் இருந்து 500 திமுக-வினர் மட்டுமே கலந்துகொண்டு கைதாகிறார்கள்...
திமுகழகத்தில் நிர்வாக வசதிக்காக 65 மாவட்டங்களாக பிரிகப்பட்டு தனித்தனியே அவற்றுக்கு மாவட்ட செயலாளர்களும் ஒவ்வொரு மாவட்ட கழகத்திற்குள்ளும் சராசரியாக 15லிருந்து 25 வரையிலான ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் பிரிக்கப்பட்டு அததற்கும் தனித்தனி அமைப்புகள் இருக்கின்றன என்பதும் நிதர்சனம்...
அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களிலும் குறைந்தது 40லிருந்து 120 கிளைக் கழகங்கள் அல்லது வார்டு கழகங்கள் வரையிலும் இருக்கின்றன அவற்றுக்கான கிளைக்கழக செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் இருக்கின்றனர் என்பதும் நிதர்சனம்...
இந்த கட்டமைப்பைத் தவிர இளைஞரணி, மாணவரணி, மகளிரணி உள்ளிட்ட சற்றேரக் குறைய 20 சார்பு அணிகளும் அவற்றுக்கு மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட கழகங்கள் வரையிலும் ஒவ்வொன்றுக்கும் ஒரு அமைப்பாளர் மற்றும் நான்கு துணை அமைப்பாளர்கள் என்று பொறுப்பாளர்கள் இருக்கின்றார்கள் என்பதும் நிதர்சனம்...
அதாவது ஒரு மாவட்டத்திற்கு மிகக் குறைவாக கணக்கிட்டால் கூட 5000 மேற்பட்ட பொறுப்பாளர்கள் என்பதும் நிதர்சனம்...
மக்களே வேண்டாம், பதவியில் பொறுப்பில் இல்லாத திமுக தொண்டர்களே வேண்டாம்...
தமிழகம் முழுவதும் 65 இடங்களில் பொறுப்பாளர்கள் மட்டுமே தனது வீட்டில் இருவரைஅழைத்து நடத்தி இருந்தால் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்திருந்தால் சுமார் அந்தந்த மாவட்டத்தில் 20 ஆயிரம் திரண்டு இருக்க முடியும்...
பொறுப்புக்கள் வாங்க பலர் காட்டும் ஆர்வத்தில், பொறுப்புக்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாங்கிக் கொடுக்க பலர் காட்டும் ஆர்வத்தில் பாதியாவது திமுக அறிவிக்கும் போராட்டத்தில் பங்கெடுத்து ஆர்வம் காட்டிருந்தால்...
சரி விட்ருவோம் ஆனால் கொஞ்சம் திமுக வின் போர்குணம் திரும்பி பார்த்தால் ஒரு நிமிசம் இல்ல பல நிமிசம் தலசுத்துது.
மேலே சொன்ன தகவல்கள் இரண்டு விஷயங்களை உறுதி படுத்துகிறது:
1. திமுக தலைமை தனது பொறுப்பாளர்கள் உடன் பேசும் communciation mode சிதலமாகி உள்ளது...
2. திமுகவின் தற்போது பொறுப்பாளர்கள் பதவி மட்டும் குறி வைத்து ருசிக்கும் பணம் சாப்பிடும் ஓநாய் என்றாகி உள்ளார்கள்...
இரண்டில் ஒன்று உண்மையா அல்லது இரண்டுமே உண்மையா...